In the face of escalating social and ecological breakdown, populations around the world are calling for a fundamental system change. Codes for a Healthy Earth offers a unifying whole-system healing framework to support people and communities in working together across national, cultural and ideological boundaries for radical system transformation and rapid social and ecological regeneration.
ஆக்கியமான பூமிக்கான குறியீடுகள்ரோ
எல்லா உயிரினங்கள் உடனும் சமாதானத்தை வளர்ப்போம்
"நமது ஒவ்வொரு ஆய்விலும், அடுத்த ஏழு தலைமுறைகளில் நம் முடிவுகளின் விளைவுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்"
— இரோகுயிஸ் முதுமொழி
முன்னுரை
நாம் எதிர்கொள்ளும் அவசர மற்றும் சிக்கலான உலகளாவியசவால்களை, அவற்றை உருவாக்கிய அதே அமைப்புகளுக்கு உள்ளிருந்து தீர்க்கப்படமுடியாது. இன்று பலதரப்பட்ட வயது மற்றும் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள், நாம் எவ்வாறு உயிரினங்களாக நம்மை ஒழுங்கமைத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடிப்படை மாற்றத்தை உலகம் முழுவதும் எழுச்சியுடன் கோருகிறார்கள்.
பல கோடிக்கணக்கான மக்களும் கோடிக்கணக்கான குழுக்களும் மீள் உருவாக்கம் மற்றும் இரக்க உணர்வு சார்ந்த தீர்வுகளுக்கு முயல்கிறார்கள். இந்த பரந்த, மாறுபட்ட உலகளாவிய இயக்கம் முழுவதிலும், இவ்வாறு அதிகரித்துவரும் அனைத்து நெருக்கடிகளையும் திறம்பட நிவர்த்தி செய்வதற்கான அறிவு, திறன்கள், யோசனைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்கள் இவைகளுடன் புத்திசாலித்தனமான, சேவை அடிப்படையிலான தலைமை நம்மிடம் ஏற்கனவே உள்ளது என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. முழு அமைப்பு சிகிச்சை முறை மற்றும் உருமாற்றத்திற்காக நம்மைத் திறம்பட சீரமைத்து ஒழுங்கமைப்பது நம்முடைய முதன்மைச் சவாலாக உள்ளது.
நமது உலகளாவிய பரந்த அறிவு மற்றும் தீர்வுகளின் உகந்த ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த, நம்மையும் நமது சமூக அமைப்புகளான ஆட்சி, சட்டம், பொருளாதாரம், ஊடகம், கல்வி முதலியவற்றை வாழ்க்கையின் கொள்கைகள் மற்றும் மனித உள்மன உணர்வுகளுடன் ஒருவழிப்படுத்த, மக்களாகிய நாம், நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டு அதிகாரத்தையும் பொறுப்பையும் மீட்க வேண்டியது அவசியம்.
இதை உணர்ந்து, இந்த பூமியின் குடிமக்களான நாம், ஆரோக்கியமான பூமிக்கான நமது பகிரப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் நுகர, உள்ளூர் மற்றும் உலக அளவில் குடிமக்கள் தலைமையிலான சுய அமைப்பை திறம்பட ஆதரிக்கும், ஒரு முழு அமைப்பை குணப்படுத்தும் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றுபடுகிறோம்.
பிரகடனம்
இந்த பூமியின் குடிமக்களாகிய நாம், நமது பூவுலகு, மற்றும் அதில் வாழும் அனைத்து ஜீவராசிகளின்மேல் அன்பு மட்டும் அக்கறையின் பேரில் ஒன்றுபடுகிறோம். பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் நல்வாழ்வையும் மீட்டெடுப்பதற்காக தேசிய கலாச்சார மற்றும் கருத்தியல் எல்லைகளைத் தாண்டி ஒரு மனிதகுலமாக நாங்கள் ஒன்றிணைகிறோம்.
நம் தனிப்பட்ட, கூட்டு மற்றும் புவி நலன் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதநேயம் செழிக்க, முழு கிரக சுற்றுச்சூழல் அமைப்பும் செழிக்க வேண்டும்.
ஆளுகைகளின் ஒரே நியாயமான நோக்கம், புவி மற்றும் புவியின் ஜீவராசிகளின் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் மட்டுமே என்று நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
எனவே, இந்தப் புவியின் குடிமக்களாகிய நாம், உடனடி மற்றும் நெகிழக்கூடிய உலகளாவிய நடவடிக்கைக்கு சுய-ஒழுங்கமைக்க உறுதியளிக்கிறோம். கீழ்க்கண்ட இலக்குகளை அடைய, அடிமட்ட இயக்கங்கள், பழங்குடி மக்கள், அரசு சாரா நிறுவனங்கள், நம்பிக்கை சார்ந்த சமூகங்கள், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிர்வாகக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் அர்ப்பணிக்கிறோம்:
1. அனைத்து உயிர் நிலைகளின் சிகிச்சை, ஒருமைப்பாடு மற்றும் நன்னிலைக்குத் திறம்பட சேவை செய்ய நமது சமூக அமைப்புகளை மாற்றுதல்.
2. காடுவளம் நிரம்ப, உயிர்க்கோளத்தின் ஆரோக்கியம் மற்றும் பன்முகத் தன்மையை மீட்டெடுத்தல்.
3. அனைத்து மனிதர்களும் விலங்குகளும் தங்களின் முக்கிய தேவைகளைக் கீழ்க்கண்ட வளங்களுக்கு உத்தரவாத அணுகல் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துதல்.
i. சுத்தமான நீர்
ii. தூய்மையான காற்று
iii. ஆரோக்கியமான மண்
iv. உயிர்ப்பிக்கும் உணவு
v. வசதியான தங்குமிடம்
vi. உடல் மற்றும் உணர்ச்சிகளுக்குப் பாதுகாப்பு ty
vii. அனைவருக்கும் தங்கள் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பரஸ்பர செறிவூட்டலில் தங்கள் தனித்துவமான திறனை உணரத் தேவையான கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் வளங்கள்
4. நமது கூட்டு சவால்கள், இருக்கும் தீர்வுகள் மற்றும் உகந்த குணப்படுத்தும் பாதைகள் பற்றிய பகிரப்பட்ட முழு அமைப்பு புரிதலை வளர்த்துக் கொள்ளுதல்
5 . சமாதானம், தயவு, பன்முகத்தன்மையில் நல்லிணக்கம், ஞானம், ஒருமைப்பாடு, பொறுப்பு உணர்தல், ஒத்துழைப்பு, மீளுருவாக்கம் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை ஆகியவற்றின் பகிரப்பட்ட கலாச்சாரத்திற்கு உலகளவில் ஒருங்கிணைந்த மாற்றத்தை உருவாக்குதல்
வழிகாட்டும் கொள்கைகள்
தற்சமயம் அவசரமாகத் தேவைப்படும் தீவிரமான முழு-அமைப்பு குணப்படுத்தும் மூலோபாயத்திற்கு அவசியமான அடித்தளமாகப் பின்வரும் கொள்கைகளுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்:
அஹிம்சை மற்றும் புரவலம்
-
எந்தத் தீங்கும் செய்யாமைக்கு முயன்று, நமது எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஊட்டமளிக்கும் விஷயங்களுடன் இணைத்துக் கொள்வோம்.
-
நாம் அனைவரும் சார்ந்து இருக்கும் வாழ்க்கையின் அஸ்திவாரங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, காலநிலை, பல்லுயிர் மற்றும் வாழ்க்கை வலை இவைகளைப் பாதுகாத்து கௌரவித்து, அவற்றின் அழகிய இயற்கை நிலைக்கு அவற்றை மீட்டெடுப்பதற்கான வேலையில் ஈடுபடுவோம்.
-
பழங்குடி மக்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாத்து, கௌரவித்து, மனித விவகாரங்களின் அனைத்து துறைகளிலும் அவர்களின் ஆலோசனை, ஞானம் மற்றும் அறிவு அமைப்புகளை ஒருங்கிணைப்போம்.
-
அடுத்த ஏழு தலைமுறைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்படும் விளைவுகளை பகுப்பாய்வு செய்வதை உறுதி செய்து, மனித மற்றும் மனிதரல்லாத பங்குதாரர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படியில் அனைத்து முடிவுகளையும் எடுப்போம்.
பன்முகத்தன்மையில் நல்லிணக்கம்
-
முன்னோக்கி செல்லும் வழியில், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் குரலுக்கு செவிமடுப்போம்.
-
அனைத்து சமூகத் துறைகளிலும் சிறுமியர் மற்றும் பெண்களின் முழு பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதி செய்வோம்.
-
னித மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையின் இன்றியமையாத மற்றும் உயிர்ப்பிக்கும் தன்மை பற்றிய நமது புரிதலை வளர்த்துக் கொள்வோம்.
-
நம் வாழ்க்கையை வளப்படுத்தும் வேறுபாடுகளைக் கொண்டாடும் உள்ளடக்கம் கொண்ட கலாச்சாரங்களை வளர்த்துக் கொள்வோம்.
-
தனிப்பட்ட, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அதிர்ச்சியின் ஆழமான அடுக்குகளை ஒப்புக்கொண்டு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முழுமையான சிகிச்சைமுறை மற்றும் மறுவாழ்வு உத்திகளை செயல்படுத்துவதில் ஈடுபடுவோம்.
பொருளாதாரம் மற்றும் சட்டம்
-
உயிரினங்களைப் பாதுகாக்கும் மற்றும் மீளுருவாக்கம் செய்யும் சட்டங்களுக்கு சட்டபூர்வமான தன்மையைக் கொடுத்து, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அனைத்து சட்டங்களையும் சட்டபூர்வமற்றதாக்குவோம்.
-
உயிரைப் பாதுகாக்கும் மற்றும் மீளுருவாக்கம் செய்வனவற்றில் மட்டுமே முதலீடு செய்து, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது தீங்கு விளைவிக்க ஏதுவான அனைத்து நிறுவனங்களிலிருந்தும் முதலீடை திரும்பப் பெற்றுக்கொள்வோம்.
-
உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் தங்களை மாற்றிக்கொள்ளவோ இல்லை கலைத்து விடவோ ஆதரவு அளிப்போம்.
-
ஆரோக்கியமிகும் பொருளாதாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நாம் மாறும்போது, அனைத்து மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மையத் தேவைகளுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்குவோம்.
கல்வி, கற்றல் மற்றும் ஊடகம்
-
உலகளாவிய மற்றும் உள்ளூர் சவால்கள், அவற்றின் முறையான காரணங்கள் மற்றும் தனிப்பட்ட, கூட்டு மற்றும் உலகளாவிய சிகிச்சைமுறை மற்றும் மாற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து துறைகளிலிருந்தும் கிடைக்கும் தீர்வுகள், முன்முயற்சிகள் மற்றும் வலைப்பின்னலின் வளம் பற்றி எல்லா இடங்களிலும் குடிமக்களுக்குத் தெரிவிப்போம்.
-
அமைப்புகள்-சிந்தனை, குறுக்கீடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் அனைத்து உயிர்களிடமும் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் புரிதல், கலை மற்றும் ஆய்வியல் பற்றி அறிந்து கொள்வோம். வாழ்க்கையின் முழு வலையையும் வளப்படுத்தும் ஆரோக்கியமான மனித சமுதாயத்தை வளர்ப்பதற்கு நமது உணர்வு, கலாச்சார விவரிப்புகள், உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் நமது சமூக அமைப்புகளை உருவாக்குவோம்.
புதிய சமூக அமைப்புகளுக்கு மாறுதல்
-
அனைத்து துறைகளிலும் முழு அமைப்பை குணப்படுத்துவதற்கான சிறந்த புதுமையான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைத் தொடங்கி, உள்ளூர் தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப உலகளாவிய தழுவல் மற்றும் செயல்படுத்தலுக்கான விரைவான பாதைகளை வடிவமைப்போம்.
-
முழு கட்டமைப்பின் நலத்துக்கும் பல துறைகளின் சிகிச்சைக்கும் உதவும் தற்போதுள்ள சிறந்த புதுமையான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அறிய, சேகரிக்க, சுத்திகரிக்க, பரப்புவதற்கு மற்றும் அவைகளிலிருந்து உருவாகும் வடிவமைப்புகளை உலகளவில் விரைவில் தழுவி உள்ளூரில் நிலைமைகளுக்கு தேவைகளுக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்தவும், பரிணாம வளர்ச்சி கொண்ட வலைதளத்தைத் தொடங்குவோம்.
-
முழு அமைப்பு ஆரோக்கியத்திற்கும் குணப்படுத்துதலுக்கும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தை சீரமைப்போம்.
-
அனைத்து மனித மற்றும் மனிதரல்லாத பங்குதாரர்களின் தேவைகள், வளங்கள் மற்றும் பரஸ்பர சார்பு நிலைகளுக்குக் குரல் கொடுத்து, புத்திசாலித்தனமான கொள்கைகள் மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வுகள் காண, சுய-ஒழுங்கமைக்கும் குடிமக்கள் தலைமையிலான மெய்யறிவு கலந்த நிபுணத்துவ சபைகளை வளர்ப்போம்.
-
வளங்கள், திறன்கள் மற்றும் அறிவு சார்ந்த உத்திகள் போன்ற ஆற்றல்களின் ஓட்டத்தைத் திறமையுடனும், நிரப்பக் கூடியதாகவும், வளம் நிரம்பியதாகவும் வளர்ப்பதற்கு அர்பணிக்கப் பட்டுள்ள முழுக்கிரகத்திலும் பரவலான சுற்றுச்சூழல் அமைப்பில், உள்ளூர் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தின் புதிய வடிவங்களுக்குத் தடையற்ற மாற்றத்தை வடிவமைத்து செயல்படுத்துவோம்.
கீழே கையொப்பமிட்டுள்ள, புவியின் குடிமக்களாகிய நாம், இந்தக் குறியீடுகளை உலகளவில் ஏற்றுக் கொள்ளும் செயல், பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் தீர்த்து, பல்லுயிரிடத்தும் இணக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் திறனை நமக்கு அளிக்கிறது என்று உறுதி கொள்வோம்.
இந்தக் குறியீடுகளிலிருந்து, அனைத்து தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் தலைமையிலான முன்முயற்சிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் தொகுப்புக்கு உருமாற்றம் செய்வதை நாம் முழுதும் ஆதரிப்போம். முழு அமைப்பு ஆரோக்கியத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பைச் சுற்றி சீரமைப்பது, உலகெங்கிலும் உள்ள குடிமக்கள் வளரும் கிரக சுற்றுச்சூழல் அமைப்பின் பகிரப்பட்ட பார்வையை வெளிப்படுத்துவதில் திறம்பட ஒழுங்கமைக்கக் கீழ்க்கண்ட சூழல்களில் உதவுகிறது.
இயற்கையை அதன் அசலான நிலை எனப்படும் தூய்மையான காற்று, வளமான பயிர்நிலம், எளிதில் அணுகக்கூடிய தூய நீர் மற்றும் உயிர்ப்பிக்கும் உணவு கூடிய நிலைக்கு மீட்டெடுத்தல்.
எல்லா மனிதர்களும் விலங்குகளும் ஒட்டுமொத்த பரஸ்பர செறிவூட்டலில் தங்களுடைய தனித்துவமான திறனை அடையத் தேவையானவற்றைத் துல்லியமாகப் பெறல்.
முழு அமைப்பின் நலனை தன் மையக் குறிக்கோளாகவும் ஒழுங்கமைக்கும் கொள்கையாகவும் கொண்டு பரவலாக்கப்பட்ட நிர்வாகங்களின் புதிய வடிவங்களை ஒழுங்கமைக்கும் உலகளாவிய சமூகம்.
மனித நேயம் ஒரு இரக்கமுள்ள, வாழ்வை வளப்படுத்தும் இனமாக ஒன்றிணைந்து செயல்பட்டு, பன்முகத்தன்மையில் எப்பொழுதும் உருவாகி வரும் நல்லினத்திற்குப் பங்களித்து, உயிர்நிலை அனைத்தும் செழிக்கப் பங்களிக்கிறது.
அனைத்து உயிர்நிலைகளுக்காகவும் நாம் ஒன்றுபட்டு எழுவோம்!